பொங்கோலில் இரண்டு புதிய தொடக்கப்பள்ளிகள்

பொங்கோலில் இரண்டு புதிய தொடக்கப்பள்ளிகள்

1 mins read
03ba5530-a731-4e93-8296-932f7ed0138b
-

புதிய குடியிருப்பு வட்டாரமான பொங்கோலின் பள்ளி இடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 2020ஆம் ஆண்டில் இரு புதிய தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. வேலர் தொடக்கப்பள்ளி, நார்த்ஷோர் தொடக்கப்பள்ளி ஆகிய இரண்டும் 2020ல் தொடக் கநிலை 1 மாணவர் சேர்க்கையைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அத்துடன் தற்போது புக்கிட் பாத்தோக்கில் உள்ள யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியும் 2021ல் பொங்கோல் வட்டாரத்துக்கு இடம் மாறவுள்ளது.

இங்கு மாணவர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இப்பள்ளி இடம் மாறுகிறது. பொங்கோலுக்கு பள்ளி மாறும் போது மாணவர்களின் படிப்புக்கு இடஞ்சல் ஏற்படாது இருக்கும் வகையில், அடுத்த ஆண்டுமுதல் உயர்நிலை 1 மாணவர்களை இப்பள்ளி சேர்க்காது. வரும் 2021ல், பள்ளியின் உயர்நிலை 4 மாணவர்கள் புக்கிட் பாத்தோக்கிலும் உயர்நிலை 1 மாணவர்கள் பொங்கோலிலும் பயில்வார்கள். அந்த ஆண்டில் மட்டுமே ஒரே நேரத்தில் இரு இடங்களில் இப்பள்ளி செயல்படும். மேலும் வழக்கநிலை (கல்வி) உயர்நிலை 5ல் பயிலும் குறைந்த அளவிலான மாணவர்கள் 2022ல் புக்கிட் பாத்தோக்கிலுள்ள வேறு உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாற் றப்படுவார்கள் என்று அமைச்சு குறிப்பிட்டது.

தற்போது புக்கிட் பாத்தோக்கில் உள்ள யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்