அங் மோ கியோ ஹப் பின்னால் உள்ள மெக்டோனல்ஸ் உணவகத் தில் புதன்கிழமை மாலை தென் பட்ட எலி அகற்றப்பட்டுவிட்டதாக உணவகத்தின் பேச்சாளர் தெரி வித்துள்ளார். மேசைமேல் வைக்கப்பட்ட 'ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்' அருகில் எலி இங்கும் அங்குமாய் ஓடும் காணொளிக் காட்சி ஒன்று இணையத்தில் வலம்வந்த வண் ணம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.10 மணி வரையில் இக்காணொளி 27,200 முறை காணப்பட்டதாகவும் 1,500 முறைக்கு மேல் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் அறியப் படுகிறது.
டுவிட்டர்வழி காணொளியைப் பதிவேற்றம் செய்த மெலிசா லத்தீஃப், உணவகத்தின் விட்டத் திலிருந்து எலி தம் உணவில் விழுந்தது என்ற தகவலையும் இணைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மெக்டோனல்ஸ் நிறுவனம் ஒரு பூச்சிக் கட்டுப்பாட்டு அமைப்பின் உதவிகொண்டு எலியை அகற் றியதுடன் உணவகம் முழுமை யாகச் சோதனையிடப்பட்டதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். மெக்டோனல்ஸ் உணவகங்கள் தரம் தொடர்பான அனைத்து கருத்துகளையும் முக்கியமாகக் கருதுவதாகவும் வாடிக்கையாளர் களுக்கு உயர்தர சுகாதாரத்தை வழங்குவதில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகவும் பேச்சாளர் கூறினார். தேசிய சுற்றுப்புற வாரியம் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்துள்ளதாகவும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை யிடம் தெரிவித்தது. வாரியம் உணவக நிறுவனங்கள் மீது 88,000க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொண்டதாக அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
'ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்' வைக்கப்பட்டிருந்த தட்டுக்கு அருகே ஓடியபடி இருந்த எலி. படம்: டுவிட்டர் காணொளிப்படம் / மெலிசா லத்தீஃப்

