வரி செலுத்தாத சிகரெட்டுகள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துவிட்ட நிலையில், இதனை முடக்கும் முயற்சியில் இறங்கிய சிங்கப்பூர் சுங்கத்துறையினர் மூன்று நாள் நடத்திய சோதனையில் மொத்தம் 152 பேரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இவ்வாரத் தொடக்கத்தில் தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஜூரோங் போன்ற இடங்களில் உள்ள வர்த்தக வட்டாரங்கள், தொழில் பேட்டைகள், குடியிருப்பு வட்டாரங்கள், வெளிநாட்டு ஊழியர் தங்குமிடம் எனத் தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின்போது வரி செலுத்தாத சிகரெட்டுகளுடன் அந்நபர்கள் பிடிபட்டனர். இதில் சுமார் 170 வரி செலுத்தாத சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. பிடிபட்டவர்களுக்கு $500 முதல் $1,200வரையிலான அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் செலுத்தாமலிருந்த பொருள் சேவை வரியின் தொகை முறையே $695ஆகவும் $51ஆகவும் கணக்கிடப்பட்டது.
கள்ள சிகரெட்: 152 பேர் சிக்கினர்
1 mins read

