நேற்று முன்தினம் இரவு சர்க்கியூட் சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் மோட்டார்சைக்கிள் மோதி 82 வயது மூதாட்டி உயிரிழந்தார். புளோக் 47 அருகில் விபத்து நிகழ்ந்தது குறித்து இரவு 9.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மூதாட்டியுடன் மோட்டார்சைக்கிளை ஓட்டிய 26 வயது ஆடவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மூதாட்டி காயங்களினால் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளோட்டி தம் வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து பின் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் சென்று மோதிக் கவிழ்ந்ததில் ஓட்டியவர் தரையில் தூக்கி எறியப்பட்டதாகக் கூறப்பட்டது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.
மோட்டார்சைக்கிள் மோதி 82 வயது மூதாட்டி மரணம்
1 mins read

