கடலில் 114 கிலோ குப்பையை அகற்றிய தொண்டூழியர்கள்

கடலில் 114 கிலோ குப்பையை அகற்றிய தொண்டூழியர்கள்

1 mins read
9c67595f-7289-49de-8e13-ccf5bf2b7f5a
-
Google News Preferred Icon

அனைத்துலகக் கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் கடலில் மிதந்த 114 கிலோ குப்பைகளை தொண்டூழி யர்கள் அகற்றினர். மூன்றாவது ஆண்டாக இவ் வாண்டு ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா வில் நடைபெற்ற கடற்கரையை தூய்மையாக்கும் பணியில் 16 வயது முதல் 62 வயது வரை யிலான 150 தொண்டூழியர்கள் பங்கேற்றனர். இதில் சுகாதார, போக்கு வரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்னும் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி னார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் கடற்கரையை தூய்மையாக்கும் முயற்சியை சிங்கப்பூர் கடலோர, துறைமுக ஆணையம் தொடங் கியது. சிங்கப்பூரின் கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது இதன் நோக்கம். "நம்முடைய கடற்துறையை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது," என்று டாக்டர் லாம் சொன்னார். "இதில் பலதரப்பட்ட வயதுடையவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது," என்றும் அவர் சொன்னார்.