தையல் கடைக்குள் புகுந்த கார்

தையல் கடைக்குள் புகுந்த கார்

1 mins read
6e26e3b7-ee7a-4fbb-be24-2a5d6652b970
-

சவுத் பிரிட்ஜ் சாலையில் இரு கார்கள் விபத்துக்குள்ளானதில் ஒரு கார் தையல் கடையில் புகுந்து விட்டது. இதில் காயம் அடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணி அளவில் நிகழ்ந்த விபத்து குறித்து காவல்துறை மேல் விவரங் களை வெளியிடவில்லை. ஆனால் விசாரணை நடைபெற்று வருவ தாக அது கூறியது. சவுத் பிரிட்ஜ் சாலையை நோக்கிச்செல்லும் டெம்பிள் ஸ்திரீட் வழியாகச் சென்ற கார் வலது பக்கமாக திரும்ப முயற்சி செய்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று பாதையை மறைத்துவிட்டது. இந்நிலையில் கார் ஓட்டுநர் தொடர்ந்து வலது பக்கமாக திரும் பினார்.

ஆனால் அவர் திரும்பியவுடன் நைல் ரோட்டை நோக்கிச் செல்லும் சவுத் பிரிட்ஜ் சாலை வழியாக வந்த மற்றொரு கார் அவரது கார் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் காரின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அவரது கார் அங்கிருந்த தையல் கடையில் புகுந்தது. இதில் இரண்டாவது காரின் 47 வயது கார் ஓட்டுநருக்கு லே சான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். தையல் கடையில் புகுந்த காரின் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.