சிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் இடையில் பிரச்சினைகள் இல்லை என்றும் தாம் பிரதமர் பதவி ஏற்றதும் முதலாவதாகச் செல்லக்கூடிய நாடுகளில் சிங்கப்பூரும் இருக்கும் என்றும் மலேசியாவின் பிகேஆர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடை பெற்ற சிங்கப்பூர் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரு அன்வார் உரை நிகழ்த் தினார். அப்போது சிங்கப்பூர்=மலே சியா இடையிலான உறவுகள் குறித்து முன்னைய நாடாளு மன்ற உறுப்பினர் ஸைனுல் அபிதீன் ரஷீத் கேள்வி எழுப் பினார்.
அதற்குப் பதிலளித்த திரு அன்வார், "இரண்டுக்கும் இடை யில் பிரச்சினைகள் இருப்பது போல எனக்குத் தெரிய வில்லை," என்றார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வர லாற்றுப்பூர்வமானது என்றும் வலுவான பொருளியலை உள் ளடக்கியது என்றும் அவர் தெரிவித்தார். "அவற்றை நாம் விட்டுவிட லாகாது. இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது என்பது விவேகமான செயல் என்று நான் கருதவில்லை என்றார் திரு அன்வார். சிங்கப்பூருடன் இதற்கு முன்பு செய்துகொள்ளப்பட்ட சில குத்த கைகள் குறித்து மலேசியப் பிரதமர் மகாதீர் தமது முடிவில் விடாப் பிடியாக இருந்ததை ஒப்புக்கொண்ட திரு அன்வார், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதன் மூலம் அதுபோன்ற சில குறிப்பிட்ட பிரச் சினைகளுக்கு முடிவு காணலாம் என்றார்.
பிரதமராக டாக்டர் மகாதீர் பொறுப்பேற்றதும் சில இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் எழுந்த பதற்றம் பின்னர் தணிந்தது. சிங்கப்பூர், மலேசியா இடையி லான தண்ணீர் ஒப்பந்தம், முன் னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் நிர்வாகத்தில் ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்ட சிங்கப்பூர்= கோலாலம் பூர் அதிவேக ரயில் திட்டம் போன்றவை அவ்விவகாரங்கள். அது பற்றி திரு அன்வார் குறிப்பிடுகையில், "எல்லாவற்றை யும் வர்த்தக ரீதியில் சிந்திக்கக் கூடாது. கவலைகளையும் உணர் வுகளையும் கவனத்தில் கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான பிணைப்பை முன் னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். "இரு நாடுகளிலும் உள்ள இப் போதைய தலைமுறைத் தலைவர் கள் இந்த இருதரப்பு உறவுகளை வளர்க்க கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். "முதலாவது, இரண்டாவது தலைமுறைத் தலைவர்களிடம் இருந்ததைப் போன்ற அதே அனு பவம், வெளிப்பாடு, உறவு போன் றவை இளம் தலைமுறைத் தலை வர்களிடம் இல்லாமல் இருக் கலாம்.

