தேக்கா நிலையம் அருகே முடிவடையும் 200 கி.மீ. நடைபாதை

2 mins read
edc971e6-e41e-41a0-b379-bdd2a16fe717
-

கூரையுடன் கூடிய நடைபாதையின் நீளத்தை மும்மடங்குக்கு அதி கரிக்கும் பெருந்திட்டம் விரைவில் நிறைவுக்கு வருகிறது. தேக்கா நிலையம் அருகே முடி வடையும் 200 கிலோ மீட்டர் நீள நடைபாதையின் இறுதிக் கட்டப் பணி வரும் புதன்கிழமை அன்று நடைபெறும் என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இதையொட்டி நடைபெறும் சிறிய நிறைவு விழாவில் பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்பார் என்றும் அது குறிப்பிட்டது.

பொதுப்போக்குவரத்து நிலை யங்கள், பேருந்து நிறுத்துமிடங் களிலிருந்து பொதுமக்கள் தங்கு தடையின்றி எளிதில் வீட்டை அடைவதற்காக 300 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட் டுள்ளது என்று ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது. எம்ஆர்டி நிலையங்களிலிருந்து 400 மீட்டர் சுற்றளவில் உள்ள குடியிருப்பு வீடுகள், பள்ளிகள், சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிலையங்களையும் 200 மீட்டர் சுற்றளவில் உள்ள பேருந்து நிலை யங்கள், எல்ஆர்டி நிலையங்களையும் இணைப்பதற்காக 2013ஆம் ஆண்டில் 'Walk2Ride' திட் டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்பு 200 மீட்டர் சுற்றளவில் பொதுப்போக்குவரத்து முனையங்களிலிருந்து பள்ளிகளை யும் சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிலையங்களையும் இணைக்கும் வகையில் நடைபாதை அமைக்கப் பட்டிருந்தது. குடியிருப்புப் பேட்டை களில் உள்ள நடைபாதைகளை நகர மன்றம் அமைத்தது. நூறு மீட்டர் கூரையுடன் கூடிய நடைபாதையை அமைக்கும் செலவு 200,000 வெள்ளி முதல் 600,000 வெள்ளி வரையிலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

புக்கிட் பாஞ்சாங்கில் பெட்டிர் எல்ஆர்டி நிலையம் அருகே புளோக் 170லிருந்து காணப்படும் கூரையுடனான நடைபாதை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்