அமைச்சு: தாதிமை இல்லம் தொடர்பான விசாரணை தொடர்கிறது

அமைச்சு: தாதிமை இல்லம் தொடர்பான விசாரணை தொடர்கிறது

2 mins read

ஒரு தாதிமை இல்லத்தில் தங்கி யிருந்த நோயாளி ஒருவர் தவறாக நடத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஃபேஸ்புக்கில் வெளியான பதிவு ஒன்றுக்கு சுகாதார அமைச்சு பதிலளித்துள்ளது. இதன் தொடர்பில் முதன் முதலில் 2016ஆம் ஆண்டில் புகார் எழுப்பப்பட்டது.

அப்போது கிளமெண்டியில் உள்ள ஆரஞ்சு வேலி தாதிமை இல்லத்தில் தங்கியிருந்த திரு ஆங் ரோங் ஷெங் எனும் நோயாளி அங்கு சேர்க்கப்பட்டவுடன் அவ ரது உடல்நிலை அதிக பாதிப்புக் குள்ளானது என்பதே அந்தப் புகார். அப்போது அந்த தாதிமை இல் லத்தை 'கே.வி. ஏ‌ஷியா கேப்பிட் டல்' எனும் நிறுவனம் நடத்தி வந்தது. தாதிமை இல்லத்தின் நிர் வாகம் கடந்த ஆண்டில் கைமா றியது.

64 வயதுடையை திரு ஆங் கடந்த மாதம் காலமானார். இதன் தொடர்பில் திரு ஆங் கின் மருமகன் டேவிஸ் ஓங், "இந்தச் சம்பவத்தை விசாரிக்க சுகாதார அமைச்சு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது," என்று கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பினார். இந்தப் பதிவு அந்தச் சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. இதற்கு சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை இரவு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்தது. "திரு ஆங்கின் குடும்பத்தார் சம்பந்தப்பட்ட தாதிமை இல்லத்தின் மீது சரமாரியாகப் புகார்கள் எழுப்பியுள்ளதால், விசாரணை மேற்கொள்ள அதிக காலம் தேவைப்படுகிறது," என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

தாதிமை இல்லங்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந் தகங்கள் சட்டத்தின் கீழ் நிர்வகிக் கப்படுகின்றன. "இந்தச் சட்டத்தின்படி அதிக விதிமீறல்கள் தென்பட்டால், அந்தத் தாதிமை இல்லத்தின் உரி மையாளர் மீது சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும். அது நீதிமன்றக் குற்றச்சாட்டு, உரிமத்துக்கு இடைக்காலத் தடை அல்லது நிரந்தர தடை அல்லது அபராதமாக இருக்கலாம். ஒருவேளை சுகாதாரப் பரா மரிப்பு ஊழியர் மீது தவறு இருந் தால், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நிபுணத்துவ அமைப்பிடம் அமைச்சு பரிந்துரை செய்யும்.

திரு ஓங்கின் ஃபேஸ்புக் பதிவில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட திரு ஆங், ஆரஞ்சு வேலி தாதிமை இல்லத்தில் சேர்க்கப்பட் டார் என்றும் 20 நாட்கள் கழித்து அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் உடனடியாக பொது மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.