கலை ஆர்வம் பெருகியது

கலை ஆர்வம் பெருகியது

1 mins read

சிங்கப்பூரில் கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர்கள், கலைநிகழ்ச்சிகளுக்குச் சென்றவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது. 54 விழுக்காடு சிங்கப்பூரர்கள் கலைநிகழ்ச்சிகளுக்குச் சென்றதாகவும் 22 விழுக்காடு சிங்கப்பூரர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்ததாகவும் தேசிய கலைகள் மன்றம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை நடத்தப்பட்டது. 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டில்தால் சிங்கப்பூரில் ஆக அதிகமானோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்ததாகவும் கலைநிகழ்ச்சிகளுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. "பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தொடர்ந்து கலைகளை ரசித்து வருகின்றனர். இது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. குறிப்பாக, நமது சமூகத்தின் பல்வேறு கலாசாரத்தைப் புரிந்துகொள்ள இது வகை செய்கிறது," என்று தேசிய கலைகள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோசா டேனியல் தெரிவித்தார்.