துப்புரவுப் பணியாளரை மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை

துப்புரவுப் பணியாளரை மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை

1 mins read
Google News Preferred Icon

தமது வேலையிடத்தில் வேலை செய்யும் துப்புரவுப் பணியாளரை மானபங்கம் செய்த குளிர்சாதனப் பெட்டி பராமரிப்பு ஊழியருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மானபங்க குற்றச்சாட்டை பங்ளாதே‌ஷியரான 45 வயது உடின் முகம்மது ஷபாப் ஒப்புக்கொண்டார். அந்த 28 வயது பெண்ணை வேலையிடத்தில் உள்ள ஓர் அறைக்குள் வரச்சொல்லி மானபங்கம் செய்தார். மானபங்கம் செய்யப்பட்டதை அந்தப் பெண் தமது மேற்பார்வையாளரிடம் தெரிவிக்க, போலிசிடம் புகார் செய்யப்பட்டது.