சிங்கப்பூர் ஆகாயப் படையை ஏமாற்றிப் பணம் பறித்த குற்றம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது ஆடவருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. 48 வயது ஜீவன் ஆறுமுகத் துக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தம்மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டைக் கடந்த மாதம் 13ஆம் தேதியன்று முன்னாள் கொன்டோமினிய நிர்வாகி ஜீவன் ஆறுமுகம் ஒப்புக் கொண்டார். ஆகாயப் படையில் பொறி யாளராகப் பணிபுரிந்த 49 வயது ராஜ்குமார் பத்மநாதனுடன் அவர் இணைந்து மோசடியில் ஈடுபட்டார். $632,000க்கும் அதிகமான பணத்தை அவர்கள் ஏமாற்றிப் பறித்தனர்.
1989ஆம் ஆண்டில் ஆகாயப் படையில் இணைந்த ராஜ்குமார், ஆகாயப் படை வழங்கும் பணிகளை ஏலத்தில் எடுக்க நிறுவனம் ஒன்றைத் தொடங்க, 2010ஆம் ஆண்டில் ஜீவனிடம் தமது ஆலோ சனையை முன்வைத்தார். அதன்படி ஜீவனின் பெயரில் நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டது. ஆகாயப் படைக்கான பழுது பார்ப்பு, பராமரிப்புப் பணிகளைச் செய்யும் ஒப்பந்தக்காரர்கள் ஏலக்குத்தகை மூலம் தேர்ந் தெடுக்கப்படுவர். பணிகள் முடிந்ததும் ஒப்பந்தக்காரர்களிடம் செய்த பணிகளுக்கான கட்டணத்தை தற்காப்பு அமைச்சு தந்துவிடும்.
14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜீவன் ஆறுமுகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

