உயிரோட்டமுள்ள வட்டாரங்கள்: திட்டத்தில் கூடுதல் பங்கேற்பாளர்கள்

உயிரோட்டமுள்ள வட்டாரங்கள்: திட்டத்தில் கூடுதல் பங்கேற்பாளர்கள்

1 mins read
9fffd379-df8c-42e9-ac31-eb65869b11fc
-

சிங்கப்பூரில் உள்ள பல வட்டாரங் களை உயிரோட்டமுள்ளவையாக்க நடைமுறைப்படுத்தப்படும் புதிய வர்த்தக மேம்பாட்டு வட்டாரத் திட்டத்தில் கூடுதலாக ஒன்பது வட்டாரங்கள் இணைக்கப்படு வதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று அறிவித்தது. பங்குதாரர்களின் துடிப்புமிக்க பங்கேற்பு காரணமாக துடிப்புமிக்க வட்டாரங்களையும் கவர்ச்சிமிகு பொது இடங்களையும் பொது மக்கள் எதிர்பார்க்கலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். ஆணையத்தின் வருடாந்திர இட நிர்வாகக் கருத்தரங்கில் இதுகுறித்து அமைச்சர் வோங் பேசினார்.

திட்டத்தில் இணைக்கப்படும் வட்டாரங்களில் பொதுமக்களுக் கான நடவடிக்கைகளும் திட்டங் களும் நடத்தப்படும். சைனா பிளேஸ், சிட்டி ஹால், ஜூரோங் கேட்வே, கம்போங் கிளாம், மரினா பே, மரினா சென்டர், பாய லேபார், ராஃபிள்ஸ் பிளேஸ், தஞ்சோங் பகார் ஆகிய வட்டாரங்கள் திட்டத்தில் இணைக் கப்படுகின்றன. திட்டத்தில் இணைக்கப்படும் வட்டாரங்கள் பல்வகை வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டுள்ளதாக ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த வட்டாரங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள பொது இடங்களையும் உருமாற்ற புதிய வர்த்தக மேம்பாட்டு வட்டாரத் திட்டத்தின்கீழ் பங்குதாரர்கள் தீவிர முயற்சியில் இறங்குவர் என்று ஆணையம் கூறியது. வட்டாரங்களை உயிரோட்டம் உள்ளதாக்கவும் அவ்விடங்களுக்கு வருகை புரிவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும். 2018-09-18 06:00:00 +0800