நாடாளுமன்றத்துக்கு ஒன்பது புதிய நியமன உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சிங்கப்பூர் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதிப் பார்கள். தேசிய தொழிற்சங்க காங்கிரசைப் பிரதிநிதிக்கும் திரு அரசு துரைசாமி, சாக்கே ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு டக்லஸ் ஃபூ பியாவ் யோங், சிங்கப்பூர் சீனப் பல்லிய இசைக் குழு வின் தலைமை இயக்குநர் திரு ஹோ வீ சான், தொடர்பு, தொழில் நுட்பப் பேராசிரியர் திருவாட்டி லிம் சுன் சன், சமயங்களுக்கிடை யிலான லாபநோக்கமற்ற 'ரோசஸ் ஆஃப் பீஸ்' குழுவின் தோற்று நரான திரு அப்பாஸ் அலி முகம்மது இர்ஷாத், சமூக தொழில் முனைவர் ஓங் சே தெங், சிங்கப்பூர் மருந்தியல் சங்கத்தின் தலைவர் திருவாட்டி ஐரீன் குவே சியூ சிங், தொழிலாளர் பொருளியலாளரும் இணைப்பேராசிரியருமான வால்டர் எட்கர் தெசேரா, உடற்குறையுள்ள நீச்சல் வீராங்கனை குமாரி யிப் பின் சியூ ஆகியோரே அந்த ஒன்பது பேர்.
தேர்வு பெற்ற அனைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் புதியவர்கள். இம்மாதம் 21ஆம் தேதியோடு பதவிகாலம் முடிவடையும் தற்போ தைய ஒன்பது நியமன நாடாளு மன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளிலிருந்து விலகி விட் டனர். நியமன உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவுக்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், "இந்த ஒன்பது பேரும் நியமன உறுப்பினர் களுக்கான அனைத்துத் தகுதி களையும் பெற்றிருந்தனர்.
(இடது) தேசிய தொழிற்சங்க காங்கிரசைப் பிரதிநிதிக்கும் திரு அரசு துரைசாமியும் சமயங்களுக்கிடையிலான லாபநோக்கமற்ற 'ரோசஸ் ஆஃப் பீஸ்' குழுவின் தோற்றுநரான திரு அப்பாஸ் அலி முகம்மது இர்ஷாத்தும் புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்தியர்கள். படங்கள்: என்டியுசி, தொடர்பு தகவல் அமைச்சு

