சிங்கப்பூரில் $20 மி. செலவில் 'மெர்க்' உயிரியல் மருந்தக ஆய்வுக்கூடம்

1 mins read
f9d0724c-cc8f-4241-acab-7fb137d64468
-

மெர்க்' எனும் ஜெர்மானிய உயிரியல் மருத்துவ நிறுவனம் $20 மில்லியன் செலவில் பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தில் மருந்தக ஆய்வுக்கூடம் ஒன்றினை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தது. வட்டார சுகாதார பராமரிப்புத் தேவைகள் அதிகரித்து வரும் சமயத்தில், ஆய்வுக்கூடத்தின்வழி 'மெர்க்' நிறுவனம் சிங்கப்பூரில் செய்துள்ள முதலீடு இன்றியமையாதது என்று கூடத்தைத் திறந்து வைத்த வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் கூறினார்.

பாசிர் பாஞ்சாங்கில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 'மெர்க்' நிறுவனத்தின் உயிரியல் மருந்தக ஆய்வுக்கூடம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்