எஸ்ஐஏ விமானி மது அருந்தியதாகப் புகார்

1 mins read

எஸ்ஐஏ விமானி ஒருவர் மது அருந்தியதாகச் சோதனைவழி தெரிய வந்த சம்பவம் தொடர்பில் அவ்விமானிமீது சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற சம்பவத்தை விசாரிப்பது பத்தாண்டுகளில் இதுவே முதல் முறை என்று ஆணையத்தின் இயக்குநர் எலன் ஃபூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத் திரிகையிடம் தெரிவித்தார். விமானி மது அருந்துவதற்கான வரம்பை மீறியது சோதனையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து வெலிங்டன் நகருக் குச் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவை, சனிக்கிழமை அன்று ரத்து செய் யப்பட்டது. சம்பவம் தொடர்பில் எஸ்ஐஏ நிறுவனம் விமானியைத் தற்காலிக பணிநீக்கம் செய்ததுடன் அதன் சொந்த விசாரணையையும் தொடங்கியுள்ளது. பொதுவாக விமானத்தை இயக் குவதற்குமுன் விமானியின் தகு திக்கூறுகள் உறுதி செய்யப்படும். அதில் ஒன்றுதான் கடுமையான மருத்துவப் பரிசோதனை.