பாலியல் குற்றம் புரிந்தவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

பாலியல் குற்றம் புரிந்தவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

1 mins read

சிறுவர் இல்லத்தில் ஏற்கெனவே நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனையில் இருந்த இளைஞர் ஒருவருக்கு, இல்லத்தில் இருந்த மற்றொரு சிறுவனைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நேற்று மேலும் 18 மாதங்கள் நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணை விதிக்கப்பட்டுள்ளது. இல்லத்தில் வசித்த 18 வயது இளைஞர், 14 வயது சிறுவனைப் பாலியல் பலாத்காரம் செய்த இரு குற்றச்சாட்டுகளைச் சென்ற மாதம் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட சிறுவனைப் பாதுகாக்க இளைஞரின் பெயர், சிறுவர் இல்லத்தின் விவரங்கள் அனைத்தும் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நன்னடத்தைக் கண்காணிப்புடன் இளைஞர் 40 மணிநேரம் சமூக சேவையும் ஆற்ற வேண்டும். அத்துடன் இளைஞரின் நன்னடத்தையைக் கண்காணிக்க அவருடைய தாயாருக்கு $5,000 பிணை விதிக்கப்பட்டுள்ளது.