அமைச்சர் இங்: புதிய உலக அமைப்புக்கு நெறிமுறை தேவை

2 mins read

புதிய உலக அமைப்பை, கொடுக் கல் = வாங்கல் முறையி லா ன தாக மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது அமெரிக்கா, சீனா, மற்ற உலக நாடுகள் யாவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்க டாலர் 200 பில்லியன் பெறுமானமுள்ள சீனப் பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்து அறிவித்த பின்னர் டாக்டர் இங் இவ்வாறு கூறினார். இதுபோன்ற குறுகிய மனப்பான் மையுடைய அணுகு முறை, கசப் புணர்வையும் குறுகியக ண்ணோட் டத்தையும் முடிவில் சோகத்திற் கும் நம்மை இட்டுச் செல்லும் என்ற அவர், இதற்கு மாற்றாக, அனைத்து நாடு களையும் ஒன்று படுத்தக்கூடிய சிந்தனை அடிப் படையில் புதிய உலக அமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

அப்படிப்பட்ட அமைப்பில் வர்த்தகம் வளர, ஏழ்மை குறைய, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க வர்த்தக சபையின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சமூகத்தின் மதிய விருந்து நிகழ்ச்சியின் பேசிய அமைச்சர் கூறினார். உலகமயமாதல் எந்த வடிவத்தைப் பெறும் என்பதில் வரும் ஆண்டுகளில் அமெரிக்கா வும் சீனாவும் முக்கிய பங்காற்றும் தெளிவாகத் தெரிகிறது. இதில் அமெரிக்காவும் சீனாவும் எவ்வாறு தங்களது இரு தரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல் கின்றன, மற்ற உலக நாடுகள் அதனை எப்படி எதிர்கொள்கின்றன என்பவை புதிய உலக அமைப்பைத் தீர் மானிக் கும். வர்த்தகத்திலோ, அனைத்துலக உறவுகளிலோ கொடுக்கல் = வாங்கல் முறை இருந்தாலும், அவை ஒரு நெறி முறை அடிப்படையி ல் இருக்க வேண்டும் என்றார் டாக்டர் இங்.