தேசிய சேவை புரியத் தவறியவருக்கு $6,000 அபராதம்

தேசிய சேவை புரியத் தவறியவருக்கு $6,000 அபராதம்

1 mins read
Google News Preferred Icon

ஒரு வயதாக இருந்தபோது சிங்கப்பூரர் எனப் பதிவாகி, பின் 22வது வயதில் சிங்கப்பூர்க் குடியுரிமையைத் இழந்த எக்காவிட் டங்டராகார்ன் என்னும் தாய்லாந்து நாட்டவருக்குத் தேசிய சேவை புரியாத குற்றத்திற்காக நேற்று $6,000 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது 24 வயது நிரம்பிய எக்காவிட், இத்தனை ஆண்டுகளாக தாய்லாந்திலேயே இருந்ததாகவும் இப்போதுதான் தேசிய சேவை புரியத் தவறியதன் தொடர்பில் சிங்கப்பூருக்குத் திரும்பியுள்ளதாகவும் அறியப்படுகிறது. சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லாதவர் சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்பி வந்து தேசிய சேவை புரியாததன் தொடர்பிலான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதற்கிடையில் எக்காவிட் தாய்லாந்து ராணுவத்தில் மூன்றாண்டு தேசிய சேவை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.