இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய மையம்

2 mins read

பான மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ள புதிய வட்டார இணையப் பாதுகாப்பு மையம் மூலம் ஆசியான் நாடுகள் ஒத்துழைக்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நடத் தப்படும் சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன். இந்த நிகழ்வு சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி நிலையத்தில் நடைபெறுகிறது. நேற்றைய நிகழ்வில் அறிவிக் கப்பட்ட இணையப் பாதுகாப்புத் திட்டங்களில் இந்தப் புதிய வட்டார இணையப் பாதுகாப்பு மையமும் ஒன்று. ஐந்து பெரிய அமைப்புகள் அதன் இணையப் பாதுகாப்புத் தேவைகளை இணையப் பாதுகாப்பு முகவையிடம் தெரியப்படுத்தி உள்ளது.

அதன் தொடர்பாக தற்போது தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை இணையப் பாதுகாப்பு முகவையிடம் இணையப் பாது காப்பு நிறுவனங்கள் அவற்றின் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். அரசாங்கத்தின் இணையப் பக்கங்களின் பாதுகாப்புப் பலவீனங்களைக் கண்டறிய இணைய ஊடுருவல் நிபுணர்களை அழைக்க அரசாங்கம் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இணையத் தாக்குதல்களைத் தடுக்க முடியாது என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ கூறினார். கடந்த ஜூலை மாதத்தில் சிங்ஹெல்த் அமைப்பின் இணையப்பக்கம் ஊடுருவப்பட்டு 1.5 மில்லியன் நோயாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் திருடப் பட்டதை அவர் உதாரணமாகக் காட்டினார்.

"இணையத் தாக்குதல்கள் நிகழுமா என்பதல்ல. எப்போது நிகழும் என்பதுதான் கேள்வி. சமுதாயங்களும் பொருளியல் களும் மின்னிலக்கமயமாவதை அடுத்து இணையத் தாக்குதல்கள் வழக்கமானதாகிவிட்டன," என்று திரு டியோ தெரிவித்தார்.