ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பத்தில் எழுவர், பணிக்குழு ஒன்றின் உதவியுடன் ஆறு மாதங்களுக்குள் புதிய வேலைகளில் சேர்ந்தனர். கடந்தாண்டு, 1,247 நிறுவ னங்களில் 9,120 சிங்கப்பூரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பொறுப்பான ஆட்குறைப்பு மற்றும் மறுவேலை வாய்ப்பு வசதிக்கான பணிக்குழு தெரிவித்தது. வேலையிழந்தோரில் சுமார் நான்கில் ஒருவர், -பணிக்குழு வின் உதவிகளை ஏற்றுக் கொண்டனர். ஆட்குறைப்பு செய் யப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்தப் பணிக்குழு இவர்களை அணுகியது.
எஞ்சியவர்கள், சுயமாகவே வேலையைத் தேடவிருப்பதாகவும் அல்லது சிறிது காலத்திற்கு ஓய்வு எடுத்துக்கொள்ள இருப் பதாகவும் பணிக்குழுவிடம் தெரி வித்தனர்-. கடந்தாண்டில், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்த நிறுவனங் களில் 90-% நிறுவனங்கள், தகுதியுள்ளோருக்கு இழப்பீடு களை வழங்கியது. இந்த விகிதம், இதற்கு முந்திய ஆண்டுகளிலும் கிட்டத்தட்ட இதே அளவில் இருந்ததாகப் பணிக்குழு தனது அறிக்கையின் மூலம் தெரி வித்தது. இழப்பீடுகளை வழங்காத நிறு வனங்கள், நிதிப்பற்றாக் குறையை முக்கிய காரணங்களில் ஒன்றாகச் சுட்டியுள்ளன. கடந்தாண்டு மனிதவள அமைச்சு, சர்ச்சைகளை நிர்வகிப் பதற்கான முத்தரப்புக் கூட்டணி, நியாயமான, முற்போக்கான ஆட் சேர்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி ஆகியவை, ஆட்குறைப்பு தொடர்பான சர்ச் சைகளின் தொடர்பில் 74 புகார் களைப் பெற்றனர்.

