எஸ்ஐஏ: மருந்துத் தயாரிப்பு சரக்குகளை கொண்டுசெல்லும் சேவை அறிமுகம்

எஸ்ஐஏ: மருந்துத் தயாரிப்பு சரக்குகளை கொண்டுசெல்லும் சேவை அறிமுகம்

1 mins read
Google News Preferred Icon

விமானம் மூலம் மதிப்புள்ள மருந்துத் தயாரிப்பு சரக்குகளைக் கொண்டுசெல்லும் சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 'துருகூல்' எனப்படும் இந்தச் சேவை, ஆகாயப் போக்குவரத்தின்போது கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த வெப்பநிலையில் மருந்துத் தயாரிப்பு, சுகாதாரப் பராமரிப்புப் பொருட்களைத் தரம் கெடாமல் பாதுகாக்க உதவும். எஸ்ஐஏ நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தது.

விமான நிலையங்களில் சாய்வுப் பாதையின் வழி மருந்துத் தயாரிப்பு சரக்குகளை மாற்றிவிடும் வசதி, குளிர்சாதன வசதி கொண்ட அறை, வெண்கம்பளம் உள்ளிட்டவை இப்புதிய சேவையில் அடங்கும். வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட கொள்கலன்களில் தாங்கள் அனுப்பிய சரக்குகளை வாடிக்கையாளர்கள் கண்காணிக்க முடியும். இந்நிலையில், ஆசிய=பசிபிக் வட்டாரத்தில் CEIV Pharma சான்றிதழளிக்கப்பட்ட முதல் விமான நிறுவனம் எஸ்ஐஏ என்று அந்நிறுவனச் சரக்குப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் சின் யாவ் செங் கூறினார். உலகின் 130க்கும் அதிகமான நகரங்களுக்கு எஸ்ஐஏவின் இந்தச் சரக்கு விமானச் சேவைகள் கிடைக்கும்.