சிங்கப்பூர், ரஷ்யா நாடுகளுக்கிடையே பெருகிவரும் வர்த்தக வாய்ப்புகள்

1 mins read

ரஷ்யாவில் பயனீட்டாளர் நலன், தொழில்நுட்பம் போன்ற தொழில் துறைகளில் நிலவும் வாய்ப்புகளை சிங்கப்பூர் வர்த்தகங்கள் ஆராய முடியும். இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் புத்தாக்க முறை யை மேம்படுத்த இணைந்து பணி புரிய முடியும். ரிட்ஸ்=கார்ல்டன் மில்லேனிய ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ரஷ்யா=சிங்கப்பூர் வர்த்தகக் கருத் தரங்கில் இந்தத் தகவல் முன்வை க்கப்பட்டது. என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கு, வர்த்தக முதலீடு களையும் கருத்துப் பரிமாற்றங்க ளையும் வளர்க்க ரஷ்ய, சிங்கப்பூர் வர்த்தகங்களை ஒன்றி ணைக்க முனைகிறது. இவ்வாண்டு 13வது முறையாக நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட சிங்கப்பூர், ரஷ்ய வர்த்தகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.