பூனையைக் காப்பாற்ற இணையத்தில் மனு: பதில் அளித்த நகர மன்றம்

பூனையைக் காப்பாற்ற இணையத்தில் மனு: பதில் அளித்த நகர மன்றம்

1 mins read

பாசிர் ரிஸ் அக்கம்பக்க வீடமைப்பு பேட்டையில் திரிந்து கொண்டிருந்த பூனை ஒன்றை பாசிர் ரிஸ்=பொங்கோல் நகர மன்றம் அங்கிருந்து நீக்குவதற்கு எதிராக இணையத்தில் அவ்வட்டாரவாசிகள் ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11ல் காணப்பட்ட 'ஜின்ஜர்' எனப்படும் அந்தப் பூனையை அந்நகர மன்றம் அப்பகுதியிலிருந்து நீக்க இருப்பதாக அறியப்படுவதாக மனுவில் கூறப்பட்டது. நேற்று பிற்பகல் நிலவரப்படி மனுவில் 15,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டிருந்தனர். அப்பூனை தனது கார் மீது ஏறி கீறியதால் அந்த காரின் உரிமையாளர் ஒருவர் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து அப்பூனையை நீக்க திட்டம் இருப்பதாக செய்தி பரவியது. இதன் தொடர்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்த பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம், அப்பூனையை அப்பகுதியிலிருந்து நீக்கவோ இடமாற்றம் செய்யவோ தனக்கு எந்தவொரு நோக்கமும் இல்லை என்று கூறியது.