பொதுவாக மழை பெய்தால், பயணிகள் பேருந்துக்குள் ஏறும்போதோ பேருந்திலிருந்து இறங்கும்போதோ விரைவாக செல்வார்கள். நேற்று முன்தினம் மாலையில் கடும் மழை பெய்து கொண்டிருந்தபோது, 59ஆம் சேவை எண் கொண்ட எஸ்பிஎஸ் பேருந்தில் ஏற முயன்ற பயணிகளுக்கு அதன் ஓட்டுநர் திரு பாங் யீ பாவ், குடை பிடித்து அவர்கள் மழையில் நனையாமல் பேருந்துக்குள் ஏற உதவினார். இச்செயல், சமூக ஊடகங்களில் பலரது பாராட்டுகளை அவருக்குப் பெற்று தந்துள்ளன. இதன் தொடர்பில் கருத்துரைத்த எஸ்பிஎஸ் நிறுவனப் பேச்சாளர் திருவாட்டி டேமி டான், திரு பாங்கின் செயல் எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. அவருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படும் என்றார்.
மழையில் பயணிகளுக்கு உதவிய பேருந்து ஓட்டுநருக்குப் பாராட்டுகள்
1 mins read

