மேலும் இரு பள்ளிகளில் 'ஓ' நிலை மாணவர்கள் சேர்ந்துகொள்ளலாம்

மேலும் இரு பள்ளிகளில் 'ஓ' நிலை மாணவர்கள் சேர்ந்துகொள்ளலாம்

1 mins read

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தைக் கொண்டிருக்கும் கடைசி இரு பள்ளிகளும் அடுத்த ஆண்டிலிருந்து 'ஜிசிஇ' சாதாரண நிலை மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும். ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி, டன்மன் உயர்நிலைப் பள்ளி ஆகியவையே அந்த இரு பள்ளிகள் என்றும் அடுத்த ஆண்டிலிருந்து அவை கூட்டு மாணவர்கள் சேர்க்கை முறை மூலம் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு ஆண்டு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை அளிக்கும் இரு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 'ஓ' நிலை தேர்வு எழுதாமல் நேராக 'ஏ' நிலை தேர்வு எழுதுவார்கள் அல்லது அனைத்துலக 'பாக்கலரேட்' தேர்வு களை எழுதுவார்கள்.

தற்போது மேற்கூறப்பட்ட இரு பள்ளிகளும் மற்ற பள்ளிக ளிலிருந்து தங்கள் தொடக்கக் கல்லூரி நிலைகளுக்கு 'ஓ' நிலை மாணவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த இரு பள்ளிகள் மட்டுமே இவ்வாறு செய்யாமல் இருந்தன. "நமது பள்ளிகளில் பன்முகத்தன்மை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரு பள்ளிகளின் மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களு டன் தொடக்கக் கல்லூரி நிலையில் கலந்துறவாடி, புதிய அனுபவத்தைப் பெறுவார்கள்," என்றும் அமைச்சு கூறியது. தேசிய தொடக்கக் கல்லூரி, ஆங்கில-சீன தன்னாட்சிப் பள்ளி, இனோவா தொடக்கக் கல்லூரி, ஹுவா சோங் தொடக்கக் கல்லூரி, ராஃபிள்ஸ் கல்வி நிலையம், தெமாசெக் தொடக்கக் கல்லூரி, விக்டோரியா தொடக்கக் கல்லூரி ஆகிய பள்ளிகளுடன் ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியும் டன்மன் உயர்நிலைப் பள்ளியும் சேர்ந்துக்கொள் ளும்.