ஆசிரியர்களின் அனுபவத்துக்கு முக்கியத்துவம் என்டியுசி ஃபஸ்ட் கெம்பஸ் அமைப்பின் பாலர் பள்ளி ஆசிரியர் கள் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தங்களின் பகுதிநேர ஆரம்பகால பாலர்பருவ பட்டக் கல்வியை ஆறு மாதங் களுக்கு முன்னரே முடித்து விட லாம். அந்தப் பல்கலைக்கழகம் அறி வித்திருக்கும் புதிய ஏற்பாட்டின் வழி இது சாத்தியமாகிறது. அடுத்த ஆண்டு முதல், பாலர் பள்ளி ஆசிரியர்களின் பணி மற் றும் கற்றல் அனுபவத்தைக் கருத் தில் எடுத்துக்கொண்டு, அவர் களுக்கு சில பாடங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதன்படி, தங்களின் பணி மற்றும் கற்றல் அனுபவத்தால் ஆசிரியர்களுக்கு 20 மதிப்பெண் புள்ளிகள் அளிக்கப்படும். அது நான்கு பயிற்சிகளுக்குச் சமமா கும்.
இதனால், அவர்கள் இயல்பான பட்டக்கல்வி நிறைவுபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே படிப்பை முடிக்க வாய்ப்பு ஏற்படு கிறது. "தங்கள் பகுதிநேர ஆரம்பகால பாலர்பருவ பட்டக் கல்வியைக் கற் கும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி மற்றும் கற்றல் அனுபவத்தால் மதிப்பெண் புள்ளிகள் வழங்கப் படும் முறையை ஓர் உயர்கல்விக் கழகத்துடன் இணைந்து செயல் படுத்தியுள்ள முதல் பாலர் பள்ளி நடத்துநராக நாங்கள் திகழ் கிறோம்," என்றார் என்டியுசி ஃபஸ்ட் கெம்பஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி திரு சான் டீ செங்.

