சான்: மின்தடைக்கு எரிசக்தி உற்பத்தி பாகங்களே காரணம்

சான்: மின்தடைக்கு எரிசக்தி உற்பத்தி பாகங்களே காரணம்

1 mins read

செவ்வாய்க்கிழமை பின்னிரவில் ஏற்பட்ட மோசமான மின்தடைக்கு செம்கார்ப் கோஜன், செனோக்கோ மின் நிலையங்களின் எரிசக்தி உற்பத்தி பாகங்களே காரணம் என்று புலனாய்வுகளில் தெரிய வந்துள்ளது என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பொது மின்சாரச் சந்தை அறிமுக விழாவில் கலந்துகொண்ட திரு சான், செம்ப் கார்ப் நிறுவனத்தின் கீழ் இயங்கும் முதலாவது எரிசக்தி சாதனம் செயலிழந்தது. பின்னர் அதற்கு மாறாக செயல்பட்ட அடுத்த சாதனத்தி லும் செயலிழப்பு ஏற்பட்டது. இரண் டுக்கும் ஒரே மாதிரியான பாகங் களே இருந்தன. "இந்தப் பாகங்களை சிங்கப்பூரில் உள்ள மற்ற மின் நிலையங் களும் பயன்படுத்துவதால் இது குறித்து கூடுதல் சோதனை கள் நடத்தப்பட்டு வருகின்றன. "உதிரிப் பாகங்களின் மூல உற்பத்தியாளர்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.