மூப்படைந்துவரும் மக்கள் தொகை, உயர் தொழில்நுட்பத் தகுதியுடைய ஊழியர் பற்றாக்குறை யால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கப் பூருக்கு வெளிநாட்டுத் திறனாளர் கள் தேவைப்படுகின்றனர் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். எதிர்காலத் தேவைகளுக்கேற்ப மென்பொருள் உருவாக்குதல் உட் பட சில துறைகளில் வெளிநாட் டுத் திறனாளர்கள் தேவைப்படுகி றார்கள். முதலீடுகளை ஈர்க்கும், தொழில்துறையை ஊக்கப்படுத்தும் துடிப்பான பொருளியலுக்குத் தேவைப்படும் போதுமான ஊழியர் கள் சிங்கப்பூரில் உள்ளனரா என் பதுதான் முக்கியமான கேள்வி என்று திரு ஓங், புளூம்பர்க் செய்தி நிறுவனம் கடந்த புதன் கிழமை நடத்திய நேர்காணல் ஒன்றில் கூறினார்.
'வெளிநாட்டுத் தொழில்நுட்ப திறனாளர்கள் தேவை'
1 mins read

