பிட்காயின் முதலீடுகளுக்கு ஆள்சேர்ப்பதற்கு தமது பெயரைப் பயன்படுத்தும் இணையப்பக்கம் ஒன்றில் உள்ள விவரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று பிரதமர் லீ சியன் லூங் எச்சரித்துள்ளார். இது குறித்து நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், "யார் வேண்டுமானாலும் பொய்யான செய்திக்கு இலக்காக லாம்," என்றார். பிட்காய்ன் முதலீடுகளுக்கு ஆள்சேர்ப்பதன் தொடர்பில் அண்மையில் பரவி வந்த மோசடி ஒன்றையும் திரு லீ சுட்டினார். அதில் இரண்டு இணையப்பக் கங்கள், துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறியதாக பொய்யான கருத்துகளைப் பரப்பி வந்தன.
அந்த இணையப்பக்கங்கள் குறித்து சிங்கப்பூர் நாணைய ஆணையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. திரு லீ வெளியிட்ட பதிவில், இணையப்பக்கத்தின் முகப்பு படம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில், பிட்காயின் முதலீடுகளின் ஆதாயம் குறித்து திரு லீ கூறியதாகச் சில கருத்துகளை அந்த இணையப்பக்கம் வெளி யிட்டது. ஆனால், இவை தாம் கூறியவை அல்ல என்று பிரதமர் தெளிவுபடுத்தினார். "இணையத்தில் பார்க்கும் எல்லாவற்றையும் நம்ப வேண் டாம்," என்று பிரதமர் லீ எச்சரித்துள்ளார்.
மேலும், வேண்டுமென்றே பொய்ச் செய்தியைப் பரப்புவது தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழு, இணையத்தில் பொய்யான செய்திகள் பரவு வதைத் தடுப்பதற்கு அரசாங்கத் திற்கு அதிகாரம் வழங்க புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருப்பது பற்றியும் திரு லீ எழுதியுள்ளார். குழுவின் ஆய்வு அறிக்கை யையும் அதன் பரிந்துரைகளையும் அரசாங்கம் கவனமாக ஆராயும் என்று பிரதமர் குறிப்பிட்டார். அதேநேரத்தில், பொய்ச் செய்திகளுக்கு எதிரான போரில் பொதுமக்களும் பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.

