ஹாலந்து கிரீனுக்கும் ஹாலந்து பிளேனுக்கும் இடையே புக்கிட் தீமா முதலாம் மாற்றுவழி கால் வாயின் 800 மீட்டர் பகுதியில், $3.9 மில்லியன் மதிப்பிலான மேம் பாட்டுப் பணிகளையொட்டி அங்கு மூன்று மழைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தோட்டங்கள் நேற்று அதி காரபூர்வமாகத் திறக்கப்பட்டன. புக்கிட் தீமா கால்வாய்க்குள் ஓடும் மழைநீரின் தரத்தை மேம்படுத்தும் வகையில் இத்தோட்டங்கள் வடிவ மைக்கப்பட்டுள்ளன.
மெதுவோட்டத்திற்கும் சைக் கிள் ஓட்டுவதற்கும் பாதைகள், உடற்பயிற்சி செய்வதற்கான சாத னங்கள், இளைப்பாறுவதற்கு ஏற்ற வாறு அகல இருக்கைகள் உள் ளிட்ட பல்வேறு வசதிகள் இப்பகுதியி ல் உள்ளன. பாறைகளால் செய்யப்பட்ட சுவர்களும் செடிகொடிகளும் கால் வாய் நெடுக அணிவகுத்து நிற்கி ன்றன. 'ஆக்டிவ், பியூட்டிஃபுள், கிளீன் (ஏபிசி) வாட்டர்ஸ்' எனப்படும் இத் திட்டப்பணியை பொதுப் பயனீ ட்டுக் கழகம் ஏற்று நடத்துகிறது. இத்திட்டப்பணியை முடிக்க ஈராண்டுகள் எடுத்தன. சிங்கப்பூரின் 37வதும் புத்திட் தீமாவின் முதலாவதுமான இத் திட்டப்பணி, புக்கிட் தீமாவில் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் சாக்கடை மேம்பாட்டுப் பணியை ஒட்டி அமைகிறது. மொத்தம் 3.2 கிலோ மீட்டர் நீள புக்கிட் தீமா முதலாம் மாற்று வழி கால்வாய்க்கான இந்த மேம்பாட்டுப் பணிகள் 2013ஆம் ஆண்டில் தொடங்கின.
இந்த மேம்பாட்டுப் பணிகள் இவ்வாண்டின் இறுதிக்குள் நிறைவுபெறும்போது, அப்பர் புக்கிட் தீமாவின் நீர்பிடிப்புப் பகுதி யில் வெள்ளநீர் பாதுகாப்பு முறை மேம்படுத்தப்படும். நீ ஆன் பல துறைத் தொழிற்கல்லூரி, பியூட்டி வொர்ல்ட் பிளாசா, புக்கிட் தீமா கடைத்தொகுதி உள்ளிட்டவை அப்பர் புக்கிட் தீமாவில் அமைந்து உள்ளன. கால்வாயின் மேம்பாட்டுப் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. அக்கால் வாயில் இருந்து நீர் பாண்டான் நீர்தே க் கத்திற்கு ஓடுகிறது.
பு க்கிட் தீமாவில் 'ஏபிசி வாட்டர்ஸ்' திட்டம் நிறைவடைந்துள்ளது. இக்கால்வாயின் 800 மீட்டர் நீளப் பகுதியில் மூன்று மழை தோட்டங்கள் உள்ளன. இவற்றில் உள்ள பசுமை நிறைந்த பல்வேறு வசதிகளைக் குடியிருப்பாளர்கள் பயன்படுத்தலாம். நேற்றைய நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (முதல் வரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். ஹாலந்து=புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்தஃபர் டி சூசா (வலக்கோடி) உடன் உள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

