பொருளியல் முன்னேற்றத்திற்கும் நகர மேம்பாட்டிற்கும் பெயர் பெற்ற சிங்கப்பூர், மனிதர்களுடன் நீர்நாய்களும் சகோதரத்துவ சக வாழ்வு வாழமுடியும் என்பதை உலகுக்கு உணர்த்தும் முன் மாதிரி நாடாகவும் திகழ்கிறது என்று அனைத்துலக வல்லுநர் கூறுகிறார். நீர்நாய் சிறப்பு வல்லுநர் குழு மம் என்ற ஓர் அமைப்பை ஏற் படுத்தி அந்த அமைப்புக்கு தலை வராக இருந்து வருகின்ற டாக்டர் நிக்கோல் டியுப்ளக்ஸ், அனைத் துலக ரீதியில் நீர்நாய் துறையில் தலைசிறந்த வல்லுநராகத் திகழ் கிறார்.
உலகில் வேறு எங்கும் இல் லாதபடி சிங்கப்பூரின் நகரச் சூழலில் நீர்நாய்கள் நன்கு உயிர் வாழ்கின்றன. இதனைப் பொறுத்த வரையில் சிங்கப்பூர் உலகிலேயே சீரிய ஓர் இடமாகத் திகழ்கிறது என்று அந்த வல்லுநர் தெரிவித் ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
உலகைப் பொறுத்தவரையில் நீர்நாய்களைக் கட்டிக்காப்பதில் சிங்கப்பூர் முதன்மையான எடுத் துக்காட்டாகத் திகழ்கிறது என்று டாக்டர் டியுப்ளக்ஸ், 75, தெரி வித்து இருக்கிறார்.
இது சிங்கப்பூரில் சாத்தியமாக இருக்கும் நிலையில் உலகின் இதர பகுதிகளிலும் இத்தகைய சகோதரத்துவ சகவாழ்வு எப்படி முடியாத ஒன்றாகிவிடும் என்று அந்த வல்லுநர் கேள்வி எழுப் பினார். டாக்டர் டியுப்ளக்ஸ் தலைமை வகிக்கும் நீர்நாய் சிறப்பு வல்லுநர் குழுமம், அனைத்துலக இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் சிற்றின பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் வரும் ஓர் அமைப்பாகும்.

