சந்தைக்கடையில் ஸ்ட்ராபெரி விற்பனை இல்லை

சந்தைக்கடையில் ஸ்ட்ராபெரி விற்பனை இல்லை

1 mins read

சிங்கப்பூரில் மஹோட்டா சந்தைக் கடையில் வாங்கப்பட்ட ஸ்ட்ரா பெரி பழ டப்பியில் உலோகத் துண்டு ஒன்று இருந்ததாக டுவிட்டரில் படத்துடன் புதன் கிழமை டென்னிஸ் டாங் என்பவர் செய்தி வெளியிட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அந்தச் சந்தைக்கடை ஸ்ட்ராபெரி பழங்கள் விற் பனையை நிறுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் பற்றி சிங் கப்பூர் வேளாண், உணவு-கால் நடை ஆணையம் ஆராய்ந்து வருகிறது. பொறுமையாக இருக் கும்படி இந்த ஆணையம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ரா பெரி பழங்களில் ஊசிகளைப் பயனீட்டாளர்கள் பார்த்து இருக் கிறார்கள் என்றும் அங்கு ஸ்ட்ராபெரி பழங்களில் கீழறுப்பு வேலைகள் நடந்திருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் வெளி யான சூழலில் சிங்கப்பூரில் டுவிட்டர் செய்தி இடம்பெற்றது.