சாங்கி விமான நிலையம் பல சாதனைகளைப் படைத்து வருவது ஒரு புறம் இருக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளில் விடாது ஈடுபட்டும் வருகிறது. 2016ல் நிலையத்தின் முனையம் 1, 2இல் உள்ள குளீரூட்டிச் சாதனங்கள் மேலும் எரிசக்தி சேமிப்பவையாக மாற்றப்பட்டன. விமானங்களை நிறுத்தி வைக்கும் இடங்களில் உள்ள விளக்குகளும் அதேபோல் எரிசக்தி சேமிக்கும் வகையாக மாற்றப்பட்டன. டீசல் எண்ணெயில் இயங்கும் டிராக்டர் வண்டிகளுக்குப் பதிலாக பயணப்பெட்டிகளைச் சுமந்து செல்ல மின்சக்தியில் இயங்கும் டிராக்டர்களும் அறிமுகம் கண்டன. பொறுப்புடன் சுற்றுச்சூழலைப் பேணும் அதே சமயம் நம் வர்த்தக நடவடிக்கைகள் நடக்கவேண்டும் என்று நிலையத்தின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் ஜெரால்டு எங் தெரிவித்தார்.
முனையம் மூன்றின் கூரைப்பகுதி சூரிய வெளிச்சத்தைச் சரிசெய்து கூரைச் சன்னல்வழி முனையத்தை ஒளியூட்ட உதவுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

