சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் புது டையமண்ட் பாவனைச் சாதனம், அபாய ரசாயனம் மற்றும் தொழிற்சாலை தீவிபத்துக்கான (ஹெஸ்மட்) பயிற்சிகளுக்கு மேலும் யதார்த் தத்தைச் சேர்க்க உள்ளது. மண்டாய் பகுதியில் அமைந்து உள்ள உள்துறைக் குழுவின் திறன் உத்திபூர்வ நிலையத்தில் இப்புது சாதனம் அமைந்துள்ளது. வாயு, எண்ணெய்க் கசிவு சம்பவங்கள் தொடர்பான பயிற்சி களையும் இச்சாதனம்வழி மேற் கொள்ளலாம். இச்சாதனத்துடன் மொத்தம் 12 தீ தொடர்பான பாவனைச் சாதனங்கள் உள்ளன. மூன்று கசிவுத் தொடர்பான பாவனை சாதனங்களும் உண்டு. இவற்றின்வழி 40 முதல் 50 சூழ்நிலைகளை முன்னரே கணித்துப் படைவீரர்கள் சோதிக் கப்படுவார்கள் என ஹெஸ்மட் படைப்பிரிவின் தலைவர் மேஜர் லயனல் லீ கூறினார்.
2015 அக்டோபர் மாதம் அதி காரபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்ட ஐந்து மாடிக் கட்டமைப்பு கொண்ட திறன் உத்திபூர்வ நிலையத்தில் நெருப்பையும், கசி வையும் வீரர்கள் முன்னின்று எதிர்க்க, அவர்களது செயல்கள் கட்டுப்பாட்டு அறையிலுள்ள பயிற்றுவிப்பாளர்களால் கண் காணிக்கப்படும். கட்டுக்குள் அடங்காத நிலையில் தூண் களில் பொருத்தப்பட்ட கருவிகள்வழி தண்ணீர் பீய்ச்சப்பட்டு தீயணைக் கப்படும். இதற்கிடையில் புதுவகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதில் படை இறங்கியுள்ளது. உயிருக்கு ஆபத்து நேராமல் இவ்வகையான தொழில்நுட்பம் நெருப்பைத் தொலைவிலிருந்தே கட்டுப்படுத்தும்.

