எதிர்காலத்தை வடிவமைக்க அறிவியல் முதலீடுகள் தேவை

எதிர்காலத்தை வடிவமைக்க அறிவியல் முதலீடுகள் தேவை

1 mins read
e1057a3b-52f7-45f2-9134-268d24be18e2
-

ஆசியாவின் ஆறு விஞ்ஞானிகளை மையமாகக்கொண்டு சிறார்களுக் கென உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் புத்தகத் தொடர் மத்திய பொது நூலகத்தின் 'மை டிரி ஹவுஸ்' பகுதியில் நேற்று வெளியீடு கண்டது. புத்தகத் தொடரின் ஒரு நூல் சிங்கப்பூர் விஞ்ஞானி டாக்டர் சௌவ் லொக் மிங் பற்றியும் கடல்சார்ந்த உயிரியல் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளது. பவளங்களைப் பாதுகாப்பதைத் தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த டாக்டர் சௌவ்வும் புத்தகத் தொடர் வெளியீட்டிற்கு வருகை அளித்து வந்திருந் தோருடன் தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்வில் நிதி அமைச்சரும் சிங்கப்பூர் தேசிய ஆய்வு நிறுவனத் தின் தலைவருமான ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

"சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க, நாம் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். அறிவியலில் ஆர்வங் கொண்டு, அதன் சாத்தியத்தைப் புரிந்துகொண்டு பின் அதையே பயன்படுத்தித் தாக்கத்தை ஏற் படுத்த நாம் நம் பிள்ளைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும்," என்றார் திரு ஹெங். சீனாவைச் சேர்ந்த தொல் லுயிரியலாளர் சங் மீமன், இந்திய விண்வெளி விஞ்ஞானி உடுப்பி ராவ் முதலியோரும் இப்புத்தகத் தொடரில் இடம்பெற்றுள்ளனர். இப்புத்தகத் தொடர் இவ் வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூரின் அனைத்து தொடக்கப்பள்ளி களிலும் நூலகங்களிலும் கிடைக் கும்.

புத்தக வெளியீட்டின்போது நிதி அமைச்சர் திரு ஹெங் சுவீ கியட் கதை படித்துக் காட்டுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்