முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் அமைந்துள்ள ஒன்பது கடைகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றுக்கான வழிகாட்டி விலை 34 மில்லியன் வெள்ளியாக உள்ளது என 'சிபி ஆர்இ' என்ற சந்தைப்படுத்தும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தரைத்தளத்திலுள்ள கடை களின் பரப்பளவு 581 சதுர அடியி- லிருந்து 2,776 சதுர அடி வரை உள்ளது. அங் மோ கியோ, தோ பாயோ, பிடோக், தெம்பனிஸ், சாங்கி வில்லேஜ், ஈசூன், உபி ஆகிய வட்டாரங்களில் அந்தக் கடைகள் அமைந்துள்ளன. இந்தக் கடைகளை வாங்க விரும்புவோர் அவற்றைத் தனித் தனியாக அல்லது ஒட்டு மொத்தமாக வாங்கிக் கொள்ள லாம். இந்தக் கடைகள் அனைத்தும் தற்போது குத்தகையாளர்களிடம் உள்ளன. குடும்ப அலுவலகங்கள், தனியார் பங்குகளுக்கான நிதியங்கள், சொத்துச் சந்தை நிதி யங்கள், செல்வந்தர்கள் ஆகியோர் இந்தக் கடைகளை வாங்க ஆர்வம் கொண்டிருக்கலாம் என்று 'சிபிஆர்இ' நிறுவனத்தின் மூலதனச் சந்தைப் பிரிவுக்கான இயக்குநர் செம்மி லிம் தெரிவித்தார்.
முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள ஒன்பது வீவக கடைகள் $34 மி. விலையில் விற்பனை
1 mins read
-

