தங்குமிடம், தனியார் சாலைப் போக்குவரத்து ஆகிய துறைகளை தவிர, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஜூலையைப் போலவே ஆகஸ்ட்டிலும் 1.9%ஆக நீடித்தது. சேவைத்துறையில் பணவீக்கம் மிதமாக இருந்தபோதும் சில்லறை, உணவுத் துறையில் இது அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்டது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 2 விழுக் காடாக இருந்தது. அதன்பிறகு ஆக அதிக அளவாக பணவீக்கம் கடந்த ஜூலையிலும் ஆகஸ்டிலும் 1.9 விழுக்காடாக இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தின் மொத்த பணவீக்கம் நிலையாக இருந்தது. ஆண்டு அடிப்படையில் அந்த மாதத்திற்கான பணவீக்க விகிதம் 0.7% உயர்ந்தது. தங்குமிட வசதிக்கான கட்டணம் 2.6% இறங்கியதே இதற்கு முக்கிய காரணம். பொருளியல் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளின்படி இந்த மாற் றங்கள் நிகழ்ந்தன. ஜூலையின் ஆண்டு அடிப்படையிலான பண வீக்க விகிதம் 3% ஆக உள்ளது. வீட்டு வாடகைகளின் இறக் கம், வீடுகளுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்கான கட்டணங்களின் ஏற்றம் போன்ற வற்றாலும் பணவீக்கம் உயர்ந்தது.
உணவுத்துறையில் பணவீக்க விகிதம் ஜுலை மாத அளவான 1.5 விழுக்காட்டிலிருந்து ஆகஸ்ட்டில் 1.7 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

