பிரதமரின் அடையாள அட்டை எண் பயன்படுத்தப்பட்டது

2 mins read

சிங்ஹெல்த் தரவுத்தளத்தில் பிரதமர் லீ சியன் லூங்கின் தனிப்பட்ட தகவல்களையும் மருந்து விவரங்களையும் குறிப் பாக தேடிய ஊடுருவிகள், அவ ரது அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தியே அவ்வாறு செய் ததாக இந்தச் சம்பவம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு அறிவித்திருக்கிறது. பிரதமர் லீ மட்டுமின்றி வேறு இருவரின் அடையாள அட்டை எண்களையும் ஊடுருவிகள் இவ்வாறு பயன்படுத்தியதாக இந்தக் குழு தெரிவித்தது. அந்த இருவரின் அடையாளம் வெளி யிடப்படவில்லை. ஜூன் 27ஆம் தேதிக்கும் ஜூலை 4ஆம் தேதிக்கும் இடையே ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந் தன. இது தொடர்பான விசாரணை குழு ஜூலை 24ஆம் தேதியில் முதன்முதலாகக் கூடியது. முன்னாள் வட்டார நீதிபதி ரிச்சர்ட் மேக்னஸ், இந்த விசா ரணை குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.

இந்தக் குழு, தனது முதல் விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. இந்தச் சம்பவம், சிங்கப்பூரில் நடந்த இணைய ஊடுருவல் சம்ப வங்களில் ஆக மோசமானதாகத் தெரிவிக்கப்பட்டது. 1.5 மில்லியன் நோயாளி களின் தனிப்பட்ட -தகவல்களைக் கொண்ட இந்த தரவுத்தளம் ஊடு ருவப்பட்டதை அடுத்து 160,000 பேரின் வெளிநோயாளி மருந்து விவரங்கள் வெளியே கசிந்தன. பிரதமர் லீ மட்டுமின்றி வேறு சில அமைச்சர்களின் தனிப்பட்ட விவ ரங்களும் இவ்வாறு வெளியிடப் பட்டன.

நேற்றைய விசாரணையில், ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார தரவு அமைப்புகளைச் (ஐஎச்எஸ்) சேர்ந்த மூன்று ஊழியர்கள், தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னால் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய ஆதாரங் களை வழங்கினர். அந்த ஊழியர்களில் ஒருவ ரான ஐஎச்எஸ்ஸின் துணை ஆய் வாளரான திரு சாய் சீ சுன், 'சன்ரைஸ் கிளினிக்கல் மேனேஜர்' தரவுத்தளத்தில் பல்வேறு தேடல் கள் ஜூன் 26ஆம் தேதிக்கும் ஜூலை 8ஆம் தேதிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரி வித்தார்.