ஆடவர்களுக்கு இடையிலான பாலியல் உறவைத் தடைசெய்யும் குற்றவியல் தண்டனை சட்டத் தின் '377ஏ' பிரிவை ரத்து செய் வது நன்மையைவிட தீமையையே அதிகம் ஏற்படுத்தும் என்ற ஜாமியா சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்திருக்கிறது. "ஒரே பாலின உறவு குறித்து இஸ்லாமியச் சட்டத்தின் நிலைப் பாடு தெளிவாகவே உள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடு வதையும் ஆதரிப்பதையும் இஸ் லாம் தடை செய்கிறது," என்று ஜாமியா தெரிவித்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமண உறவை மட்டுமே இஸ்லாம் அங்கீகரிப் பதாக அந்த அமைப்பு கூறியது.
இந்தியாவில் இது போன்ற ஒரு சட்டத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 6ஆம் தேதி ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் '377ஏ' பிரிவு பற்றிய விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சிங்கப் பூரில் வாழும் மக்களின் பன் முகத்தன்மையைத் தான் அங் கீகரிப்பதாக ஜாமியா கூறியது. பாலியல் இச்சைகள் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கருதுவதாக அந்த அமைப்பு தெரிவித்தது. "ஓரினச் சேர்க்கையாளர் களுக்கு எதிரான அடக்கு முறைகளும் பாகுபாடும் நிறுத் தப்படவேண்டும். மாறாக, இஸ்லாம் போதிக்கும் அன்பு, மன்னிப்பு, பரிவு ஆகிய பொது வான பண்புகள் கடைப்பிடிக் கப்படவேண்டும்," என்றது அந்த அமைப்பு.

