பராமரிப்புத் துறைகளில் சேர அதிக ஆர்வம் காட்டும் இளையர்கள்

பராமரிப்புத் துறைகளில் சேர அதிக ஆர்வம் காட்டும் இளையர்கள்

1 mins read
Google News Preferred Icon

தாதிமை, சமூக ஊழியம், ஆரம்பக் கல்வி உள்ளிட்ட பராமரிப்புத் துறைகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மூன்று உள்ளூர் பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இதனை தெரிவித்தன. சமூக ஊழிய பட்டப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை சமூக அறிவியல் பல்கலைக்கழகம், 61லிருந்து இவ்வாண்டு 81ஆக அதிகரித்துள்ளது. ஆரம்பக்கல்விக்கான இடங்களும் 59லிருந்து 76க்கு அதிகரிக்கப்பட்டன. சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் சுகாதாரப் பராமரிப்பு துணைச் சேவைகளுக்குரிய பட்டப்படிப்புக்கான 300 இடங்களுக்கு கிட்டத்தட்ட 2,500 விண்ணப்பங்கள் குவிந்ததாக அந்தக் கல்வி நிலையம் தெரிவித்தது.