சிங்கப்பூர் நாணய ஆணையம், நிதி முறைகேடுச் சம்பவங்களை எவ்வாறு அடையாம் காண்கிறது, ஆணையத்திற்கு எத்தகைய அதிகாரங்கள் உள்ளன, முறைகேடுகளுக்கு எதிராக எந்தெந்த அமலாக்க நடவடிக்கைகளை அது எடுக்கலாம் என்பதை விளக்கும் அமலாக்கக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் ஆணையம், இதுபோன்ற ஒரு குறிப்பை வெளியிட்டது. 2016ஆம் ஆண்டில் நாணய ஆணையம், புலனாய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு ஒன்றை உருவாக்கியது. வங்கித்துறை, காப்புறுதி, கடன் பத்திரங்களுக்கான சந்தைகள் ஆகியவற்றை இந்தப் பிரிவு மேற்பார்வை செய்து வருகிறது.
நிதி முறைகேடு விசாரணை குறித்து நாணய ஆணையம் விளக்கம்
1 mins read