ஆண்டின் முதல் பாதியில் நிகழ்ந்த மோட்டார் வாகன விபத்துகள், மோசமானதாக இருந்ததுடன் கூடுதல் காயங்களையும் ஏற்படுத்தின என்று பொதுக் காப்புறுதிச் சங்கம் நேற்று வெளியிட்ட தகவல் தெரிவித்தது. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் புகார் செய்யப்பட்ட மோட்டார் வாகன விபத்துகள் எண்ணிக்கை 4.3% குறைந்திருந் தாலும், கோரப்பட்ட காப்பீட்டுத் தொகை 11.8% அதிகரித்து உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. காப்பீட்டுக் கோரிக்கைத் தொகை மொத்தம் $291.3 மில்லியன் என்றும் தெரிவிக்கப் பட்டது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் காப்பீட்டுக் கோரிக்கைத் தொகை $17.2 மில்லியனாக இருந்தது. இதனை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் 30 வரையில் செய்யப்பட்ட காப்பீட்டுக் கோரிக் கைத் தொகை $12.6 மில்லியன் நட்டத்தில் அமைந்துள்ளது. பொதுவாகவே காப்புறுதி வர்த் தகத்தில் மோட்டார் வாகனம் தொடர்பான காப்பீட்டுக் கோரிக் கைத் தொகை மூன்றாவது காலாண்டாக நட்டத்தில் தொடர் வதாகவும் கூறப்பட்டது. இந்நிலைக்கான காரணம் என்ன என்பதன் விவரங்கள் உறுதியாகக் கூறப்படாவிட்டாலும், விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் கடுமையானதாகவும் அதிகமாக வும் இருக்கலாம் என்பது சங்கத் தின் ஊகம். அத்துடன் வழக்கறிஞர்கள் மூலம் கோருவோர் எண் ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

