சிங்கப்பூருக்கு 13வது இடம்

சிங்கப்பூருக்கு 13வது இடம்

1 mins read
1205492a-f17d-42cb-841c-19f812fb9c27
-

மொத்தம் 195 நாடுகளின் மனித மூலதனத்தை 1990 முதல் 2016 வரை மதிப்பீடு செய்த நீண்டகால ஆய்வு ஒன்றில் சிங்கப்பூர் 13வது இடத்தைப் பிடித்துள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கைவழி சுகாதார அளவீட்டு, மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு, பொருளாதார உற்பத்தித் திறனுக்குப் பங்காற் றும் ஒரு நாட்டின் ஊழியர்களது கல்வி அடைவுநிலை, கற்றல் நிலை, சுகாதாரநிலை ஆகியவற் றின் அடிப்படையில் நடத்தப் பட்டது. அத்துடன் 1990ல் 43வது இடத்தைப் பிடித்திருந்த சிங்கப்பூர் இப்போது வெகுவாக முன்னேறியது இதில் புலப்படு வதாகக் கழகம் தெரிவித்தது.

முதல் நான்கு நிலைகளில் பின்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகள் முறையே இடம்பெற்று உள்ளன. 1990ல் 6வது இடத்திலிருந்த அமெரிக்கா 27வது இடத்திற்கு சரிந்துள்ளதாகவும் அறியப்படு கிறது. மனித மூலதனத்தை மதிப் பிடுவதன்மூலம் அரசாங்கம் மக் களின் கல்வியிலும் சுகாதாரத் திலும் எந்த அளவுக்கு முன் உரிமை அளித்து முதலீடு செய்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். 2018-09-26 06:00:00 +0800