சிறு-=விலங்கு மருத்துவர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சங்கம் முதல்முறையாகச் சிங்கப் பூரில் மாநாடு ஒன்றிற்காக கூடியுள்ளது. நேற்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை மரினா பே சேண்ட்ஸில் நடக்கும் இம்மாநாட்டில் செல்லப் பிராணி களின் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதும் விலங்குநலப் பிரதிநிதிகளாக மருத்துவர்கள் திகழ்வதும் பற்றி பேசுகிறார்கள். விலங்குகளிடமிருந்து மனி தர்களுக்குப் பரவக்கூடிய நோய் களை எதிர்ப்பது, விலங்கு நலனைப் பேணுவது, தெருக் களில் வாழும் விலங்குகளைச் சமாளிப்பது போன்ற விவகாரங் களில் கால்நடை மருத்துவர் களின் முக்கிய பங்கு பற்றி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பேசினார். பல கால்நடை மருத்துவர்கள் கடந்த ஆண்டுகளில் முன்வந்து வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்துடன் இணைந்து செயல்படுவதைக் குறித்தும் அவர் பேசினார்.
முதல் கால்நடை மருத்துவர் மாநாடு
1 mins read

