பகிர்வு சைக்கிளை பயன்படுத்த 'க்யூஆர்' குறியீட்டு முறை

பகிர்வு சைக்கிளை பயன்படுத்த 'க்யூஆர்' குறியீட்டு முறை

2 mins read
b7976211-c817-4bf0-a808-261049f2cafe
-

பகிர்வு சைக்கிள்களைக் கண்ட இடங்களில் நிறுத்துவதைத் தடுக்க வரும் ஜனவரியில் பகிர்வு சைக்கிள் திட்டத்தில் 'க்யூஆர்' குறியீட்டு முறை அறி முகம் செய்யப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதியிலிருந்து க்யூஆர் குறியீடுகள் சைக்கிள் நிறுத்தும் இடங்களில் கட்டம் கட்டமாக பொருத்தப்படும். வரும் ஜனவரியி லிருந்து இந்தக் குறி- யீடுகளை 'ஸ்கேன்' செய்யாமல் பகிர்வு சைக்கிள்களைக் கண்ட இடங் களில் நிறுத்துவோருக்கு கட்டண மாக $5 விதிக்கப்படும். ஓர் ஆண்டிற்குள் குறைந்தது மூன்று முறையாவது பகிர்வு சைக்கிளை முறையாக நிறுத்தத் தவறினால், பயனீட்டாளர்கள் பகிர்வு சைக்கிள்களைப் பயன்- படுத்த ஓராண்டு வரை தடை விதிக்கப்படும் என்றும் ஆணை- யம் குறிப்பிட்டது. பகிர்வு சைக் கிள்களை பொது மக்கள் முறையாகப் பயன் படுத் துவதை உறுதி செய்வதற்கே இப்புதிய நடை முறைகள் கொண்டு வரப்படுவதாக அது தெரிவித்தது.

சைக்கிளை முறையாக நிறுத்- து வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தற்போது சிங்கப்பூரில் 207,000 சைக்கிள் நிறுத்து மிடங்- கள் உள்ளன. வரும் 2020ஆம் ஆண்டிற்- குள் மொத்தம் 267,000 சைக்கிள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து 7,000 சைக்கிள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டதாக அது கூறியது. நாடெங்கும் சைக்கிள் நிறுத்- துமிட வசதியை அதிகரிக்க பங் காளித்துவ முகவைகள், தனியார் மேம்பாட்டாளர்கள், கட்டட உரி- மை யாளர்கள் ஆகியோருடன் இணைந்து தொடர்ந்து செயல் பட உள்ளதாக ஆணையம் கூறியது.

சைக்கிள் நிறுத்தும் இடங்கள் கிட்டத்தட்ட 99 விழுக்காடு பொது வீடமைப்புப் பேட்டைகளி- லிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் அல்லது 400 மீட்டர் தூரத்தில் உள்ளன. மேலும், பலதுறை மருந்தகம், சமூக நிலை- யங்கள், பள்ளிகள், நகர மையங் கள் போன்ற 97 விழுக்காடு முக்கிய இடங்களும் சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு ஐந்து நிமிட நடை தூரத்திலேயே உள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், க்யூஆர் குறியீடு பயன்பாடு குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்- துவதற்காக அடுத்த மாதத் தொடக்கத்தில் பொதுக்கல்வி இயக்கங்கள் மேற்கொள்ளப்படும்.