சிங்கப்பூருக்கு 13.91 மில்லியன் சுற்றுப்பயணிகள் கடந்த ஆண்டு வருகையளித்ததாகவும் உலகின் 162 நகரங்களில் சிங்கப்பூர் ஐந் தாவது இடத்தைப் பிடித்துள்ளதாக வும் மாஸ்டர்கார்ட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. பேங்காக், லண்டன், பாரிஸ், துபாய் ஆகிய நகரங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. ஆசிய பசிபிக் நாடுகளில் சுமார் 20 மில்லியன் சுற்றுப் பயணிகளை வரவேற்ற பேங்காக்கை அடுத்து, சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள் ளது. சுற்றுப்பயணிகள் செய்யும் செலவுகளை அடிப்படையாகக் கொண்ட பட்டியலிலும் சிங்கப்பூர் முதல் ஐந்து நிலைகளில் வந் துள்ளது.
சுற்றுப்பயணிகள் மொத்தம் $17.02 (S$23.23) பில்லியன் அமெரிக்க டாலரை சென்ற ஆண்டு சிங்கப்பூரில் செலவழித் துள்ளதாகவும் அந்த வகையில் உலகிலேயே நான்காவது இடத்தை சிங்கப்பூர் பிடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் துபாய், மெக்கா, லண்டனை அடுத்து சிங்கப்பூர் இடம்பெற்றுள் ளது. பேங்காக் ஐந்தாவது இடத் தில் உள்ளது. சுற்றுப்பயணிகள் ஒரு நாளில் சராசரியாக $390ஐ சிங்கப்பூரில் செலவிடுகின்றனர். மேலும் அவர் கள் இங்கு சராசரியாக 4.3 இரவுகள் தங்குகின்றனர். சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப் பயணிகளில் சீன நாட்டவர்களின் எண்ணிக்கை ஆக அதிகமான தாக, 18.8 விழுக்காடாகவும் அடுத்த நிலையில் இந்தோனீசியர் களின் எண்ணிக்கை 15 விழுக் காடாகவும் இருந்தது.

