நீ ஆன் சிட்டியில் தீச்சம்பவம்

நீ ஆன் சிட்டியில் தீச்சம்பவம்

1 mins read
7b99356e-c34c-4e39-a6a8-47c40820cf05
-
Google News Preferred Icon

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள நீ ஆன் சிட்டி கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர் களும் வாடிக்கையாளர்களும் கட்டடத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். தீச்சம்பவம் தொடர் பான தகவல் மாலை 5.08 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. தீயணைப்புப் படை கட்டடத்தின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள படிக்கட்டருகே எரிந்துகொண் டிருந்த தீயை அணைக்கத் தண்ணீர்க் குழாயைப் பயன் படுத்தியதாக அறியப்படுகிறது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பிடித்ததற் கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.