பல்கலைக்கழகங்களின் புதிய தரவரிசை முறை

பல்கலைக்கழகங்களின் புதிய தரவரிசை முறை

1 mins read
0426267e-a275-4c39-bb46-5b3b6e15a655
-

பல்கலைக்கழகங்கள் சமுதாயத் தின்மீது ஏற்படுத்தும் பரவலான அளவு தாக்கத்தை மதிப்பிடும் புதிய உலகளாவிய தரவரிசைப் பட்டியல் முறை அடுத்தாண்டு வெளியிடப்படும் என்று நேற்று நடைபெற்ற 'த டைம்ஸ்' உயர் கல்வி உலகக் கல்விசார் மாநாட்டின்போது கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறி வித்தார். பட்டதாரிகள் பெறும் வேலைகளின் தரம், பொருளி யல் வளர்ச்சிக்கும் புத்தாக்கத் திற்கும் அவர்களின் பங்களிப்பு, அவர்கள் ஏற்படுத்திக்கொள் ளும் உலகளவிலான உறவுகள் அடிப்படையில் இப்புது பட்டியல் முறை அமைக்கப்படும்.

இப்புது பட்டியல் வழி பல்கலைக்கழகங்கள் சமுதாயத் தின்மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு விரிவான மதிப்பீடு கிடைக்கும் என்பது நோக்கம். ஒரு நிறுவனத்தின் வெளியீடு களையும் விவரங்களையும் மட் டும் கொண்டு அதன் தாக் கத்தை மதிப்பிடாமல் அதற்கு மீறியும் உலகளாவிய தர வரிசைப் பட்டியல்கள் அமைய வேண்டும். அவ்வகையில் கல் விக்கு அப்பால் தொழில்துறைகள், சமுதாயம், சமூகங்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற் படுத்தும் தாக்கத்தைக் கொண்டு ஒரு பல்கலைக்கழகத்தின் செயல் திறனை மதிப்பிட வேண்டும் என்று திரு ஓங் கலந்துரையாடலின் போது கூறினார். 2018-09-27 06:00:00 +0800