7 எம்ஆர்டி நிலையங்கள் மூடும் நேரத்தில் மாற்றம்

1 mins read
b93ace12-98ec-4c58-bf2b-d9f09f0658d1
-

கிழக்கு=மேற்கு எம்ஆர்டி ரயில் பாதையில் உள்ள ஏழு நிலையங்கள் அடுத்த மாதம் வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் வழக்கத்தைவிட முன்னதாக இரவு 11 மணிக்கு மூடப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று அறிவித்தது. பராமரிப்புப் பணிகள், மேம்பாடுகள், புதுப்பிப்பு வேலைகள் ஆகியவற்றை மேற்கொள்ள தியாங் பாரு முதல் கிளமெண்டி வரையிலான நிலையங்கள் முன்னதாக மூடப்படும். இதனால் ஜூரோங் ஈஸ்டிலிருந்து ஊட்ரம் பார்க் வரையில் பயணிகளுக்காக இலவசப் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வட-க்கு-=தெற்கு, கிழக்கு= மேற்கு எம்ஆர்டி ரயில் பாதைகளின் புதுப்பிப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் முடிவடையும். 2018-09-27 06:00:00 +0800